10 முறை மோடி தமிழகத்திற்கு வந்தால் மீண்டும் நாங்களே வெற்றி பெறுவோம் - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு.!!
rs barathi press meet in tirunelveli
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"திமுக கூட்டணி உடைந்து விடும் என்று அ.தி.மு.க.வினர் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்துதான் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால், திமுகவின் பலம் இன்னும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் முடிந்ததும், அந்தக் கட்சியிலிருந்து மேலும் சிலர் திமுகவுக்கு வந்து விடுவார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எட்டு முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தார். அதனால் நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். தற்போது 10 முறை மோடி தமிழகத்துக்கு வந்தால் 234 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
rs barathi press meet in tirunelveli