திருப்பூரில் ₹295 கோடி நலத்திட்ட உதவிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்!
₹295 crore welfare scheme assistance in Tiruppur Chief Minister MK Stalin will provide today
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில்இன்று நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
விழாவில், வருவாய்துறை, ஊராட்சி துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 19,785 பயனாளிகளுக்கு மொத்தம் ₹295.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட உள்ளன . மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்க இருக்கிறார்.
விழா முடிந்ததும் முதல்வர், உடுமலையிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்படுகிறார் . அவரது வருகையையொட்டி உடுமலை நகரம் முழுவதும் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று மாலை கோவைக்கு வந்த முதல்வர், வேன் மூலம் உடுமலை சென்றபோது, கருப்பு-சிவப்பு பலூன்களும், பதாகைகளும் ஏந்திய தொண்டர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் வரிசையாக நின்று உற்சாக வரவேற்பளித்தனர். வேனிலிருந்தபடியே கைகளை அசைத்து, வணக்கம் கூறி முதல்வர் மக்களை வரவேற்றார்.விழா முடிந்ததும் மாலை கோவைக்கு சென்று விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.
English Summary
₹295 crore welfare scheme assistance in Tiruppur Chief Minister MK Stalin will provide today