தொடங்கியது ராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்..!!
rameshwaram fishermans start protest
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்த சம்பவம் சகா மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மீனவர்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
English Summary
rameshwaram fishermans start protest