ஆசிரியரை அதிர்ச்சியில் உறைய வைத்த மாணவிகள் - ராக்கி கயிறால் நடந்த சம்பவம்.!!
15000 student tied rakhi band to teacher khan sir
நேற்று முன்தினம் நாடு முழுவதும் தக்ஷ பந்தன் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது பெண்கள் தங்களது சகோதரராக கருதும் ஆண்களுக்கு ராக்கி கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் கான். மாணவர்களால் கான் சார் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார்.

இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு துறையில் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி கல்வித்துறையில் சாதித்து வரும் கான் சாருக்கு அவரது பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் என்று மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ரக்ஷா பந்தணை முன்னிட்டு ராக்கி கயிறு கட்டியுள்ளனர்.
மாணவிகளின் இந்த விலைமதிப்பில்லாத அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இந்தச் சம்பவம் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
English Summary
15000 student tied rakhi band to teacher khan sir