சிறுநீர் வெளியேறினால் நுரை வருகிறதா?.! எச்சரிக்கையுடன் விழிப்புணர்வு பதிவு..!!
Foam is coming out of the urine solution
சிறுநீரக நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான். அதேபோல் ஒரு நாளைக்கு ஒருவர் அதிகளவு சிறுநீர் கழிப்பது நல்லது தான். ஆனால் 20 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் நிச்சயம் அது கண்டிப்பாக பிரச்சனை தான். எனவே அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
அதே போல சில சமயத்தில் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிப்படும், இது எதனால் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால் அது புரோட்டினூரியா எனப்படும் சிறுநீரில் புரதம் கலப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் வடிகுழாயில் விந்து தங்கியிருந்தால் கூட சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம்.

நுரை போன்று சிறுநீர் வெளிப்படும் போது அச்சப்பட தேவையில்லை. தொடர்ந்து நுரை போன்று சிறுநீர் வெளிவருவதை கண்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. பூச்சி, பாம்பு கடித்து விஷம் ஏறுதல்.உணவில் அதிக இரசாயன கலப்பு.கல்லீரல் நோய், சேதம், செயலிழப்பு. கர்ப்பம் போன்ற காரணங்களினாலும் சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம்.
இதயத்தில் குறைபாடு, வீக்கம், எரிச்சல், செயலிழப்பு.உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம். சிறுநீர் தொடர்ந்து நுரை போன்று வெளிப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இதனால் பல விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Foam is coming out of the urine solution