சென்னை சாலையோரங்களில் கேட்பாரற்று கிடந்த 525 வாகனங்கள்! ஏலம் விடும் சென்னை மாநகராட்சி!
525 vehicles abandoned chennai Corporation
சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் 525 வாகனங்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்/மண்டல அலுவலகம்/காவல் நிலையத்தை 15 நாட்களுக்குள் அணுக வேண்டும்.
அவ்வாறு 15 நாள்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
525 vehicles abandoned chennai Corporation