எலியை விட சிறிய பாலூட்டியின் படிவம்... 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்...!
mammal smaller than mouse creature that lived 74 million years ago
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.

இது 74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச்சிறிய அதாவது 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு சிறிய பாலூட்டி (mammal) உயிரினத்தின் உடல் பாகங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது எலியை விட சிறிய பாலூட்டியாகும்.இந்த கண்டுபிடிப்பில் ஒரு கடைவாய்ப்பல் உட்பட தாடை எலும்பின் ஒரு பகுதியாக இருக்கும் புதைப்படிவம் கிடைத்துள்ளது.
இதனை சிலி பல்கலைக்கழகம் மற்றும் சிலியிலுள்ள மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆராய்ச்சி பிரபல ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
டைனோசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இது பிளாட்டிபஸைப் போன்ற முட்டையிடும் உயிரினம் அல்லது கங்காருவைப் போல அதன் குஞ்சுகளை அதன் உடலின் ஒரு பை போன்ற பகுதியில் வைத்திருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கலாம் என்று என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதன் பற்களிலிருந்து, இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் ஒரு விலங்கு என்று கருதப்படுகிறது.
English Summary
mammal smaller than mouse creature that lived 74 million years ago