சென்னை,கோவையைத் தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
Following Chennai and Koyambedu cleanliness workers are protesting in Ramanathapuram and Cuddalore
சென்னை,கோவையைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தால் தேங்கும் குப்பையால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இந்தநிலையில் இரவு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கோவையிலும் ஒப்பந்த அடிப்படையில், பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில, இன்று காலை, தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு, ஊதிய உயர்வு, வழங்க வேண்டும் என சொல்லி, காரமடை நகராட்சி வளாகத்தில் அமர்ந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய, குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்திருக்குகிறது. அவ்வப்போது, மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில், தேங்கும் குப்பை காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைபோல 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தை தொடர போவதாக தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
Following Chennai and Koyambedu cleanliness workers are protesting in Ramanathapuram and Cuddalore