தபால் நிலைய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்!
Sexual harassment at the post office Police officer dismissed from duty
தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் கொடுத்த போலீஸ்காரர் ணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஓடும் பேருந்தில் பாலில் தொல்லை ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை விமானத்தில் பாலிய பிள்ளை என நீண்டு கொண்டே செல்கிறது பெண்களுக்கான எதிரானபாலியல் சில்மிஷங்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் திரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல பேரூந்து,விமானம் போன்றவைகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தபால் நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த 33 வயது மதிக்கத்தக்க ஊழியரான பெண் ஒருவர் கடந்த 8-ந் தேதி பொன்மலை பகுதியில் தபால் வினியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் தபால் நிலைய ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம் காணக்கிளியநல்லூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் 30 வயது மதிக்கத்தக்க கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணனை பொன்மலை போலீசார் அதிரடியாக கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 5-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் காவலர் ஒழுங்கு விதிக்கு மாறாக செயல்பட்டதால் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
English Summary
Sexual harassment at the post office Police officer dismissed from duty