திருச்செந்தூர் கோவில் கொடிபட்டம் வீதி உலாவில் தகராறு - இரு தரப்பினருக்கு இடையே மோதல்.!!
two gangs attack in thiruchenthur murugan temple flag street walk
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ள இந்தத் திருவிழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற 23-ந் தேதி காலை 7 முதல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் வைத்து 14 ஊர் செங்குந்தர் சார்பில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜையும், கொடிப்பட்டத்துக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த மண்டபத்தில் இருந்து கொடிப்பட்டத்தை வாங்குவதற்காக 3-ம் படி செப்பு ஸ்தலத்தார் ஐயப்பன் அய்யர் மற்றும் திரிசுதந்திர ஸ்தலத்தார் சபா, கைங்கர்யா சபா நிர்வாகிகள் காத்திருந்தனர்.
ஆனால் மண்டபத்தின் வெளியே வைத்துதான் கொடிப்பட்டத்தை தருவோம் என்று கூறிவிட்டு 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் புறப்பட்டனர். இதனால் இரு தரப்புக்குமிடையே திடீர் மோதல் ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக சுமார் 1 மணி நேரம் காலதாமதமாகி கொடிப்பட்டம் வீதி உலா தொடங்கியது.
English Summary
two gangs attack in thiruchenthur murugan temple flag street walk