தூய்மை பணியாளர்கள் கைது - உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு.!!
lawyers appeal for sanitation workers arrest
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மற்றும் ஆறு ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.
தொடர்ந்து 14 வது நாளாக இந்தப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ‘சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, போலீசார் நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் அவர்கள் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர் .
English Summary
lawyers appeal for sanitation workers arrest