2026 சட்டசபைத் தேர்தல் முன்னேற்றம்! வாக்காளர் பட்டியலில் விசேஷ திருத்தம் இன்று முதல்...! 
                                    
                                    
                                   2026 Assembly Election Progress Special revision voter list from today
 
                                 
                               
                                
                                      
                                            இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டம் பீகாரில் கடந்த மாதம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்ட திருத்தப்பணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று முதல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
முதற்கட்டம்:
இன்று நவம்பர் 4-ந்தேதி முதல் டிசம்பர் 4-ந்தேதி வரை வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் கணக்கெடுப்பு படிவங்களை வழங்குவார்கள்.
இரண்டாம் கட்டம்:
டிசம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மூன்றாம் கட்டம்:
ஆட்சேபனைகள் மற்றும் புதிய கோரிக்கைகள் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை பெறப்படும்.
நான்காம் கட்டம்:
அனைத்து ஆட்சேபனைகள், கோரிக்கைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படும்.
இந்த தீவிர திருத்தப்பணி மூலம், “ஒருவரும் விடுபடாமல், ஒருவரும் இருமுறை சேராமல்” என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கை நிறைவேற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       2026 Assembly Election Progress Special revision voter list from today