உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் இந்திய வீராங்கனைகள்...! - விளம்பர மதிப்பு வானளவில் உயர்வு! 
                                    
                                    
                                   Indian womens cricketers after World Cup victory Advertising value skyrockets
 
                                 
                               
                                
                                      
                                            13வது 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்க வரலாற்றை எழுதி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நவி மும்பையில் நடந்த அதிரடி நிறைந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் தென்னாப்ரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய பொற்காலத்தை தொடங்கின.

இது இந்திய மகளிர் அணிக்கு முதல் உலகக்கோப்பை வெற்றி, 2005 மற்றும் 2017-இல் இறுதிப் போட்டியில் தவறவிட்ட கனவை இம்முறை நனவாக்கினர். நாட்டின் மூலைமுடுக்கிலும் இந்திய வீராங்கனைகளின் வெற்றியை மக்கள் களைகட்டிக் கொண்டாடி வருகின்றனர்.1983-இல் கபில் தேவ் தலைமையில் இந்திய ஆண்கள் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியதைப்போல, இப்போது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி உலகத்தை வென்று மகளிர் கிரிக்கெட்டின் முகவரியை மாற்றியுள்ளனர்.
இந்த வெற்றியால் இந்தியா, உலகக்கோப்பை வென்ற நான்காவது நாடாக (ஆஸ்திரேலியா – 4, இங்கிலாந்து – 4, நியூசிலாந்து – 1) இணைந்தது.சாம்பியனாக தேர்வான இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ரூ.39.77 கோடி பரிசுத் தொகை வழங்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மேலும் ரூ.51 கோடி அறிவித்தது.
இதன் மூலம் மொத்தமாக ரூ.90 கோடிக்கும் மேற்பட்ட பரிசு தொகை வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு வானளவில் உயர்ந்துள்ளது. இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியதன் பின், இவர்களின் பிராண்டு மதிப்பு 35% உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.ஸ்மிருதி மந்தனா தற்போது ஒரு விளம்பரத்துக்கு ரூ.2 கோடி,
ஹர்மன்பிரீத் கவுர் ரூ.1.2 கோடி,
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ.25–50 லட்சம்,
ஷபாலி வர்மா ரூ.25–30 லட்சம் வரை பெறுகின்றனர்.
மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.32–35 கோடிக்கும், ஹர்மன்பிரீத் கவுரின் சொத்து மதிப்பு ரூ.25 கோடிக்கும் உயர்ந்துள்ளது.இந்த உலகக்கோப்பையில் மந்தனா 434 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மா, மேலும் முழு தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மா (22 விக்கெட், 215 ரன்கள்) தேர்வாகினர்.
ஆண்கள் வீரர்களை ஒப்பிடுகையில்,"
விராட் கோலி ஒரு விளம்பரத்துக்கு ரூ.10–11 கோடி,
சச்சின் தெண்டுல்கர் ரூ.7–8 கோடி,
மகேந்திர சிங் டோனி ரூ.4–6 கோடி,
ரோகித் சர்மா ரூ.3–6 கோடி வரை பெறுகின்றனர்.
இந்த சாதனை மூலம் இந்திய மகளிர் அணி உலக கிரிக்கெட்டின் புதிய சக்தியாக எழுந்துள்ளது — நாட்டின் கனவை வெற்றியாக்கிய வீராங்கனைகளுக்கு நாடு முழுதும் பாராட்டின் வெள்ளம் பொங்குகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       Indian womens cricketers after World Cup victory Advertising value skyrockets