சுதந்திர தின விழா - மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்.!!
metro train timetable changed for independence day
இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.
கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மெட்ரோ ரெயில்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு இயக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
metro train timetable changed for independence day