வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு: அடிபணிந்த ஐசிஐசிஐ: குறைந்தபட்ச இருப்புத்தொகை மீண்டும் குறைப்பு: விபரங்கள் உள்ளே..! - Seithipunal
Seithipunal


ஐசிஐசிஐ வங்கியில் இந்த மாதம் முதல், புதிதாக கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை, ஐந்து மடங்கு உயர்த்தியது. 

அதாவது, நகர்ப்புறங்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், சிறிய நகரங்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், கிராமப்புறங்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில்,  தற்போது, ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை விட ரூ.5,000 கூடுதலாகும். முன்பு, ரூ.10,000 ஆயிரமாக இருந்தது.

அதேபோல, சிறிய நகரங்களுக்கு 25,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000ஆக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் ரூ.5,000 ரூபாயாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICICI Bank has reduced the minimum balance again


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->