புரோ கபடி லீக் 2025: தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டனான பவன் ஷெராவத்..!
Pawan Sherawat captain of the Tamil Thalaivas Kabaddi team
எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி இந்தியாவின் புரோ கபடி லீக் 12-வது சீசன் தொடங்குகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்ற இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' பவன் ஷெராவத் அறிவிக்கப்பட்ட்டுள்ளார்.
கடந்த 09-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியால் அதிகபட்சமாக ரூ. 2.26 கோடிக்கு வாங்கப்பட்ட பவன் ஷெராவத், சமீபத்தில் முடிந்த 12-வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 59.50 லட்சத்திற்கு ஒப்பந்தமானார். இவரது தலைமையிலான இந்திய அணி, தெற்காசிய விளையாட்டு (2019), ஆசிய சாம்பியன்ஷிப் (2023) போட்டியில் தங்கம் வென்றுள்ளது. கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியை சாகர் ரதீ வழி நடத்தி சென்றார்.
தமிழ் தலைவாஸ் அணியின் துணை கேப்டனாக 'ரெய்டு மெஷின்' என்று அழைக்கப்படும் அர்ஜுன் தேஷ்வல் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இவரை, அணி ரூ. 1.405 கோடிக்கு வாங்கியது.இவர், ஆசிய விளையாட்டில் (2022) தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் சார்பில், 12-வது சீசனுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 'ஜெர்சி' வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Pawan Sherawat captain of the Tamil Thalaivas Kabaddi team