முதல்முறை மட்டுமே நீட் பயிற்சி இலவசம்! அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தும் நீட் நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நுழைவு தேர்வை எழுத அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக நீட் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது.

நீட் தேர்வை எதிர் கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 413 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கபட்டன. இந்த பயிற்சி மையங்கள் 4,000 பேருக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், 'நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும். முதல் முறை தோல்வியுற்ற மாணவர்களுக்கு இரண்டாவது முறையாக அரசு பயிற்சி வழங்காது' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

neet tn govt coaching center rule


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->