கமல் பட நடிகைக்கு இந்தியாவின் உயரிய தாதா சாஹேப் பால்கே விருது! தமிழில் இந்தப் படங்களில் எல்லாம் நடித்தாரா?! - Seithipunal
Seithipunal


பழம்பெரும் திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞர் வஹிதா ரஹ்மான். 1938 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 85 வயதாகிறது. அவருக்கு இந்தியாவின் சினிமாவில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது வருடத்திற்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

1950 - 1970களில் பல்வேறு மொழி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தேசிய திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருதுக்கு 9 முறை பரிந்துரைக்கப்பட்டு 2 முறை பெற்றிருக்கிறார், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது போன்றவற்றை அவர் பெற்றிருக்கிறார். 

வஹிதா ரஹ்மான் தெலுங்குத் திரைப்படமான ரோஜுலு மராயி (1955) திரைப்படத்தில் அறிமுகமானாலும், குரு தத் இயக்கிய ஹிந்தித் திரைப்படங்களில் பியாசா (1957), காகஸ் கே பூல் (1959), சௌத்வின் கா சந்த் (1960) ஆகியவற்றில் தான் நடித்ததற்காக அவருக்கான அங்கீகாரம் பெற முடிந்தது. சாஹிப் பீபி அவுர் குலாம் (1962), படத்திற்காக அவர் தனது முதல் பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றார். அவர் 1960களின் நடுப்பகுதியில் தொடர்ந்து வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்து, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 

பாலிவுட்டில் கிளாசிக் கைட் (1965) மற்றும் ரொமாண்டிக் த்ரில்லர் படமான நீல் கமல் (1968) ஆகிய படங்களுக்காக அவர் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றதன் மூலமும் மற்றும் ராம் அவுர் ஷ்யாம் (1967) , காமோஷி (1969)  ஆகிய படங்களுக்காக அவர் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதன் மூலமும் ரெஹ்மானின் சினிமா வாழ்க்கை உச்சகட்டத்தை எட்டியது. 

2011 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் வஹிதா ரஹ்மானுக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான "பத்ம பூஷன்" விருது வழங்கி கௌரவித்தது. 

வஹிதா ரஹ்மான் தமிழில் ஜெமினி கணேசன் நடித்த காலம் மாறிப்போச்சு (ரோஜுலு மராயி படத்தின் தமிழ் ரிமேக்), எம்ஜிஆரின் புகழ்பெற்ற அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் நடனம் ஆடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

senior actress Waheeda Rahman received Dadasaheb Phalke Award 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->