3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல்! இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது!  - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதேபோல இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது என உறுதியான தகவல் இதுவரை வெளியாகாததால் திரைத்துறையினர் பீதியில் உள்ளனர். 

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பூக்கள் செட் அமைக்கும் பனியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் சண்டை கலைஞர் ஒருவர் என 3 பேர் கிரேன் விழுந்ததில் மரணமடைந்துள்ளார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. 

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமலஹாசனும் இருந்ததாகவும், அவர் சம்பவ இடத்தில் இருந்து 4 அடி தூரத்தில் மட்டுமே இருந்ததாகவும், நடிகை காஜல் அகர்வாலும் இருந்ததாக கூறப்படுகிறது. கமல் தீவிரமாக மீட்பு நடவடிக்கைகளை முன்னின்று செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் இயக்குனர் ஷங்கருக்கு கால் உடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே "இயக்குநர் ஷங்கர் நலமுடன் உள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் விபத்து நிகழ்ந்தபோது ஷங்கர் அடுத்தக்காட்சிக்கு வேறு இடத்தில் லைட்டிங் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதனால் அவருக்கு கால் எலும்பு முறிந்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை" என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dir Shankar leg has broken and severely injured.


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal