தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!
Election dates announced for five states including Tamil Nadu
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மேற்குவங்கம் மாநிலத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறஉள்ள நிலையில், மற்ற மூன்று மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடையவுள்ளது. தமிழ்நாடு உட்பட 05 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 04-ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
கேரளாவிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 09ஆம் தேதி, தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று, மே 04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
அடுத்ததாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 09-ஆம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப் பதிவு செய்யப்பட்டு, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்திற்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறவுள்ளது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
English Summary
Election dates announced for five states including Tamil Nadu