இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: எதற்கெல்லாம் தடை..? ஒருவர் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம்..?
Election Code of Conduct Comes into Force Today
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் , புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள்படி, இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒருவர், தனது கையில் ரொக்கமாக ரூ. 50,000 வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதற்குமேல் ரொக்கம் கையில் வைத்திருந்தால், அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
அத்துடன், பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருக்கும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படம் உள்ளிட்டவை அகற்றப்படும்.
தலைவர்களின் சிலைகள் துணிக்கொண்டு மூடி மறைக்கப்படும்.
ஆளும் கட்சி, அரசு இயந்திரத்தையோ, வாகனங்களையோ, அதிகாரிகளையோ தங்களது சொந்தப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுப்பது தடை.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary
Election Code of Conduct Comes into Force Today