தளபதி68 படத்தின் அப்டேட் கசிந்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்! அவசரப்பட்டு வெளியிட்ட பிரபல நடிகர், பதிவு நீக்கம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட் கிடைக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று பூஜை நடைபெற்றதாக மட்டுமே செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. அது தொடர்பான படங்கள் எதுவும் வெளியாகததால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

மேலும் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்புகளும் வரவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார் என்பது மட்டுமே தகவலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதனை, இந்த படத்தில் நடிக்கும் நடிகர் பிரசாந்த் தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார். 

பிரசாந்த் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி, இந்த படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகைகள் பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் லைலா ஆகியோர் நடிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

தளபதி 68 படம் அப்டேட் குறித்து, அப்படத்தை இயக்கும், இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவிக்கையில், லியோ திரைப்படத்தின் வெளியிட்டுக்கு பின்னர் தான் தளபதி 68 படத்திற்கான அப்டேட்டுகள் மற்றும் படங்கள் வெளியாகும் என அவர் அறிவித்திருக்கிறார். இதனிடையே நடிகர் பிரசாந்த் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டார்.

முன்னதாக லியோ படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என அப்டேட் வந்த சில நிமிடங்களிலே, தளபதி68 அப்டேட்டை நடிகர் பிரசாந்த் கசியவிட, விஜய் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உற்சாகமாக ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் தகவல் கசிந்ததை அடுத்து, படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து, பிரசாந்தின் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor prasanth leaked Thalapthy68 cast, movie unit shocked and removed the post


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->