"இந்த படத்தை நான் படமாக பார்க்கவில்லை! "ஆதிபுருஷ் பட ப்ரி ரிலிஸ் நிகழ்ச்சியில், நடிகர் பிரபாஸ் உருக்கம்! - Seithipunal
Seithipunal


இராமாயண கதையை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ஆதி புரூஷ். படத்தில் இராமனாக பாகுபாலி படப்புகழ் பிரபாஸும்  இராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ் கன்னடம் இந்தி தெலுங்கு மலையாளம் என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் 3டி தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்ற ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கிராபிக்ஸ் குறித்த கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு மேலும் 100 கோடி ரூபாய் செலவு செய்து படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை துரிதப்படுத்தி இந்த மாதம் 16ஆம் தேதி படம் வெளியாக இருப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்வு நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரபாஸ் , இந்த படத்தை நான் வெறும் படமாக பார்க்கவில்லை ,வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். திரும்ப ரசிகர்கள் அனைவரையும் திரையில் சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் தான் என்னுடைய மிகப் பெரிய பலம்.

வழக்கத்துக்கு மாறாக அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.மேலும் திருமணம் எப்போது என்று ரசிகர்களின் கூச்சலுக்கு என்னுடைய திருமணம் திருப்பதியில் தான் நடைபெறும் என்று நடிகர் பிரபாஸ் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Prabhas Emotional About His Upcoming movie Aadhi purush


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->