"துக்ளக் தர்பார்" ராசிமான் போஸ்டர்! கொந்தளிக்கும் தம்பிகள்! கூலாக்கும் பார்த்திபன்!  - Seithipunal
Seithipunal


'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணியாக நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'. இந்த படத்தினை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார். இவர்களுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் பார்த்திபனுக்கு ராசிமான் என பெயரிடப்பட்டிருக்கிறது. அவரது கட்சிக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்களில் கொடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் போஸ்டரில் ‘புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நாம் தமிழர் கட்சியினர் படத்திற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர். 

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இந்த விவகாரம் குறித்து சீமானிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,  "நண்பர் திரு சீமான் அவர்களிடம் நேரிடையாக துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் தன்மையாக, பெருந்தன்மையாக பதில் அளித்தார். 

ராசிமான் என்ற பெயர் வேண்டுமென்றோ, சீண்ட வேண்டுமென்றோ வைக்கப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.(புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’ நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்யவோ விமர்சிக்கவோ நான் இடம் தரமாட்டேன்.

எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை அப்படத்தின் இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்." என பார்த்திபன் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Parthiban explain about rasiman character


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal