இந்திய மீதான அமெரிக்காவின் பொருளாதார தாக்குதல்... திருத்தேர் திருப்பமாய் சீனா சொன்ன செய்தி!
US tax war india china reply
அமெரிக்கா, ரஷிய எண்ணெய் இறக்குமதி மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய வரி வரும் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் செய்தியாளர்களிடம் பேசியபோது, அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். “சுதந்திர வர்த்தகத்தின் முழுப் பலன்களையும் ஆண்டாண்டு காலமாக அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் இப்போது, வரிகளை மிரட்டும் கருவியாக மாற்றியுள்ளது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், “மௌனம் அச்சுறுத்துபவர்களை மேலும் வலுப்படுத்தும். எனவே சீனா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும். சீன சந்தையில் இந்தியப் பொருட்கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், உயிரி மருத்துவ உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியா பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல், மின்னணு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் சீனாவும் முன்னணி வகிக்கிறது. இந்த இரு சந்தைகளும் இணைந்தால், பிராந்திய அளவிலும், உலகளவிலும் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.
அத்துடன், “இந்திய நிறுவனங்கள் சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். அதேபோன்று, சீன நிறுவனங்களுக்கும் இந்தியா ஏற்ற சலுகைகள் அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது” என்று சூ ஃபீஹோங் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி நடவடிக்கை இந்தியா-சீனா வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வழியாய் மாறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
English Summary
US tax war india china reply