ஒரே மேடையில் பிரதமர் மோடி, சீன அதிபர், ரஷிய அதிபர்..அலறும் உலக நாடுகள்!
On the same platform Prime Minister Modi the Chinese President and the Russian President the leaders of the world
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 31ம் தேதி தொடங்குகிறது.இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு என சீனா தகவல் தெரிவித்துள்ளது.
ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உள்ளது. இந்த அமைப்பில்
இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக உள்ளது. இந்த கூட்டமைப்பின் நட்டப்பாண்டு மாநாடு சீனாவின் தியன்ஜின் நகரில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ளது. இதனால், சர்வதேச வர்த்தக போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் உறவை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேவேளை, இந்தியா மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவின் தியன்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் 20 தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், துருக்கு அதிபர் எர்டோகன், இந்தோனேசிய அதிபர் பிரபொவா சுமியண்டோ, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், வியட்நாம் பிரதமர் பஹம் மின் ஷினா, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
English Summary
On the same platform Prime Minister Modi the Chinese President and the Russian President the leaders of the world