முதலமைச்சர் சொல்லித்தான் விஜய் கட்சி தொடங்கினர் - அதிமுக அன்பழகன் பரபரப்பு பேட்டி!
TVK vijay Rangasamy ADMK Anbazhakan
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரான அன்பழகன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் புதுச்சேரியில் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் விமர்சித்தார்.
இளைஞர்கள் மத்தியில் விஜய்க்குச் செல்வாக்கு இருந்தாலும், புதுச்சேரியில் அவர் ஆற்றிய 12 நிமிட உரையில் தெளிவுகள் இல்லை என்றும், புதுச்சேரி பற்றி அவருக்குப் புரிதல் இல்லை என்றும் அன்பழகன் குற்றம் சாட்டினார்.
"மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலாப் பயணிகளுக்குக் கழிவறை வசதி, ரேஷன் கடை உட்பட அனைத்து வசதிகளும் புதுச்சேரியில் உள்ளன. இதனாலேயே விஜய் பேசிய அனைத்துக் கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் ரங்கசாமியை நேரடியாக விமர்சிப்பதற்குப் பதிலாக, விஜய் மத்திய அரசை விமர்சித்துள்ளதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.
மேலும், "விஜய்யை கட்சி தொடங்கச் சொன்னதே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிதான். அப்படி இருக்கும்போது புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல" என்றும் அவர் கூறினார். ரங்கசாமிக்கும் விஜய்க்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டு அன்பழகன் பேசினார்.
English Summary
TVK vijay Rangasamy ADMK Anbazhakan