2025-ல் தமிழ் திரையுலகின் நடிகர், நடிகைகளின் களைகட்டிய திருமணத் திருவிழா! - Seithipunal
Seithipunal


2025 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை திருமண வைபவங்களால் நிறைந்த ஆண்டாக அமைந்தது. ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திரங்கள், பாடகர்கள், யூடியூபர்கள் எனப் பலரும் இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர்.

இந்த ஆண்டின் முக்கிய 'ஸ்டார் வெட்டிங்ஸ்' பட்டியல் இதோ:

நடிகைகள்:
சாக்ஷி அகர்வால்: பிக் பாஸ் மற்றும் காலா புகழ் சாக்ஷி, தனது பால்ய கால நண்பரான நவனீத் மிஸ்ராவை கோவாவில் கரம் பிடித்தார்.

பார்வதி நாயர்: மலையாளம் மற்றும் தமிழ் நடிகையான இவர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக்கை சென்னையில் மணந்தார்.

அபிநயா: 'நாடோடிகள்' புகழ் அபிநயா, தனது நீண்ட நாள் காதலரான கார்த்திக்கை பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டார்.

நடிகர்கள்:
கிஷன் தாஸ்: 'முதல் நீ முடிவும் நீ' நாயகன் கிஷன், தனது காதலி சுச்சிதிரா குமாரை மணந்தார்.

லியோ ஹம்சவிர்தன்: நடிகர் ஹம்சவிர்தன், கேரள மாடலிங் கலைஞர் நிமிஷாவை புதுச்சேரியில் இரு மத முறைப்படி திருமணம் செய்தார்.

'பசங்க' ஸ்ரீராம்: தற்போது பயோ-டெக் நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீராம், தனது காதலி நிகில் பிரியாவை மணந்தார்.

இசை மற்றும் சின்னத்திரை:
'தெருக்குரல்' அறிவு: 'எஞ்சாய் என்சாமி' புகழ் அறிவு, காதலி கல்ப்பனாவை கரம்பிடித்தார். விழாவில் இளையராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரியங்கா தேஷ்பாண்டே: பிரபலத் தொகுப்பாளினி பிரியங்கா, வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ்: சமையல் கலைஞர் மற்றும் நடிகரான இவர், பேஷன் டிசைனர் ஜாய் கிரிஸ்ல்டா உடன் வெளியிட்ட திருமணப் புகைப்படம் பேசுபொருளானது.

இணையப் பிரபலம்:
TTF வாசன்: பிரபல யூடியூபர் வாசன், 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது மாமன் மகளை (முறைப்பெண்) திருமணம் செய்துகொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rewind 2025 Actors actresses Marriage


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->