மத்திய அரசின் 12.68 லட்சம் இமெயில் கணக்குகள் ஸோகோவுக்கு மாற்றப்பட்டுள்ளது..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த இமெயில் கணக்குகள் ஸோகோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதற்கு  மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 

நாடு முழுவதும் மொத்தம் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 12.68 லட்சம் அதிகாரப்பூர்வ இமெயில் கணக்குகள் ஸோகோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் 7.57 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சொந்தமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முக்கிய மின்னஞ்சல் கணக்குகள் மாற்றம் செயல்பாடு, தேசிய தகவல் மையம் (என்ஐசி) வழியாகவே மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, இந்த செயல்முறையின் மூலம் உருவாக்கப்படும் அனைத்து தரவுகளின் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் உரிமை அரசுக்கே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு, என்ஐசி இமெயில் அமைப்பில் இருந்து பாதுகாப்பான கிளவுட் அமைப்பு தளத்துக்கு அரசின் கணக்குகளை மாற்றுவதற்காக மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது. அதன்படி, இதனை ஸோகோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால், மென்பொருள் லைசென்ஸ் கட்டமைப்பு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவு குறித்த விவரத்தை ஜிதின் பிரசாதா குறித்த எழுத்து பூர்வ அறிக்கையில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central governmentsTwelve Lakh Sixty Thousand email accounts have been transferred to Zoho


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->