02 வது டி20 போட்டி: மிக மோசமாக தடுமாறும் இந்தியா; டி காக் அதிரடியில் வலுவான நிலையில் தென்னாபிரிக்கா..!
India is struggling badly in the India vs South Africa 2nd T20I
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், தொடர் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 02 வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
தென்னாபிரிக்க அணி சார்பில் முதலில் களமிறங்கிய டி கோக் 46 பந்துகளில் 90 ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். மார்கிரம் 39, ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் Donovan Ferreira 30 ரன்களிலும் David Miller 20 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அணியில் Arshdeep Singh மிக மோசமாக வீசினர். குறிப்பாக, ஒரு ஓவறில் அவர் 07 வைட் பந்து வீசியிருந்தார். மொத்தமாக 04 ஓவர்களில் 54 ரன்களை கொடுத்துள்ளார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி தொடக்கமுதலே சொதப்பி வருகிறது.
பெரிது எதிர்பார்க்கப்பட்ட கீழ் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கி, 17 ரங்களில் ஆட்டழிந்தார். அடுத்து வந்த அணியின் கேப்டன் சூரியகுமார் யுத்தம் வெறும் 05 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். தற்போது 03 விக்கெட் விலைப்பேற்றும் வெறும் 45 ரன்களை மாத்திரம் பெற்றுள்ளது.
English Summary
India is struggling badly in the India vs South Africa 2nd T20I