தேவயானியின் மகள் இனியா நடிகையாக அறிமுகம் — இனியாவிற்கு அடித்த லக்.. என்ன படம் தெரியுமா!
Devayani daughter Iniya debuts as an actress Iniya luck struck Do you know what film it is
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயானியின் மூத்த மகள் இனியா, பாடகியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது, அவர் தனது முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி, கோலிவுட்டில் புதிய பேச்சாக மாறியுள்ளது.
2000களில் காதல் கோட்டை, சூர்யவம்சம், நீ வருவாய் என போன்ற பல ஹிட் படங்களில் நடித்த தேவயானி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். சன் டிவியின் கோலங்கள் தொடரும் அவருக்கு பெரும் புகழைத் தந்தது. இயக்குநர் ராஜகுமாரனுடன் காதலித்து திருமணம் செய்த தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள்.
இவரது மூத்த மகள் இனியா, சரிகமபா சீனியர் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது இனிமையான குரலால் ரசிகர்களை கவர்ந்தார். பவதாரணி பாடிய “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடலை முதல் சுற்றிலேயே அசத்தலாகப் பாடி நடுவர்களின் பாராட்டைப் பெற்றார். பல சுற்றுகள் வெற்றி பெற்று வந்த அவர் இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே வெளியேறினார்.
இந்நிலையில், இனியா ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சாய் குமார் நடித்தும், ராம் ஜெகதீஷ் இயக்கியும் கடந்த மார்ச்சில் வெளியான “கோர்ட்” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கியுள்ளார். இதன் தமிழ் பதிப்பில் கதாநாயகியாக இனியா கமிட்டாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இனியாவின் நடிகை அறிமுகம் உறுதியாகும் பட்சத்தில், தேவயானியின் சினிமா மரபை தொடர்ந்து புதிய தலைமுறை நட்சத்திரம் உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
English Summary
Devayani daughter Iniya debuts as an actress Iniya luck struck Do you know what film it is