விஜயின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச் மலேசியாவில் தெறிக்க தயாராகிறது – அனிருத் கொடுத்த சூப்பரான அப்டேட்!
Vijay last film Jananayagan audio launch is all set to make a splash in Malaysia aNiruth gives a great update
தளபதி விஜயின் 69வது படமான ஜனநாயகன் — அவரது நடிகர் வாழ்க்கையின் இறுதி திரைப்படம் — வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் முழு உற்சாகத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள மலேசியாவின் ஓபன் ஸ்டேடியம் ஆடியோ லான்ச் விழாவை சுற்றி அமோக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்திற்கான ரீ-ரெக்கார்டிங் பணிகளில் முழுக்க முழுக்க ஈடுபட்டு வரும் இசையமைப்பாளர் அனிருத், “விஜய் சாரின் கடைசி படம்னு நினைக்கும்போது கொஞ்சம் சோகமா இருக்கு. ஆனால் ஆடியோ லாஞ்ச் சும்மா தெறிக்கப் போகுது!” என உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்துள்ளார்.
அவரது வார்த்தைகளில்—“ஜனநாயகன் படத்துக்கான ஆர்-ஆர் வேலை நடக்குது. இது விஜய்யுடன் எனது கடைசி கூட்டணி என்பதால் மனசு சும்மா இல்ல. ஆனா மலேசியாவில் ஆடியோ லான்ச்… அது ரொம்பவே ஸ்பெஷல் இருக்கப் போகுது. ஜனநாயகன் பாடல்களோட கூட கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் — விஜய்யுடன் நான் செய்த எல்லா பட ஹிட் பாடல்களையும் ட்ரிப்யூட்டாக பாடப் போறேன்.”
மலேசியா என்றாலே தமிழ் கலை நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு. அதிலும் தளபதியின் இறுதி ஆடியோ லான்ச் என்பதால், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரலாற்றுப் பொது தருணமாகவே பார்க்கின்றனர். ஓபன் ஸ்டேடியம் மக்கள் வெள்ளத்தில் குளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜனநாயகன் படம் பொங்கல் 2026 – ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளது.இதில் விஜயின் கேரியரை முடிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் நினைவுகூரும் பல எமோஷனல் தருணங்கள் இருக்கும் என்று படக்குழு சூசகமாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அனிருத், STR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அப்டேட்டையும் பகிர்ந்துள்ளார்.
“அரசன் படப்பிடிப்பு இப்போதுதான் துவங்கியது. முடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும். 2027ல் தான் படத்தை பார்க்க முடியும்.”
தளபதியின் கடைசி ஆடியோ லான்ச் என்பதால்,“ஆடியோ முடியும் போது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கண்கள் குளமாகிவிடும்”
என்று ரசிகர்கள் ஏற்கனவே உணர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.விஜயின் 32 வருட சினிமா பயணத்துக்கு பிரம்மாண்டமான விடை கொடுக்க மலேசியா தயாராகி வருகிறது!
English Summary
Vijay last film Jananayagan audio launch is all set to make a splash in Malaysia aNiruth gives a great update