அதிமுகவுக்கு ஆப்பு வைக்கும் செங்கோட்டையன்! அதிமுகவில் இருந்து 10 பெரும் தலைவர்கள் தவெகவுக்கு தாவவிருக்கிறார்களா? தவெகவிற்கு அடித்த ஜாக்பாட்!
Sengottaiyan is putting a wedge in the AIADMK Are 10 big leaders from AIADMK going to join the Tvk The jackpot has hit the Tvk
அதிமுகவில் தலைகள் தாறுமாறாக வெளியேறும் சூழல் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. முன்னாள் மாஜி எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், தற்போது செங்கோட்டையன் நடத்தி வருவதாகக் கூறப்படும் ‘மெகா ஆபரேஷன்’ அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்தது, அதிமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் முக்கிய முஸ்லிம் முகமாக விளங்கிய அன்வர் ராஜா திமுகவில் செல்ல, அதிமுகவின் வாக்கு வங்கி நேரடியாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனும் திமுகவில் சேர்ந்து, எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்ததோ அரசியல் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்த தொடர் வெளியேறல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட செங்கோட்டையன் தவெகவைத் தேர்ந்தெடுத்து இணைந்தது, ஒரு பெரிய மாற்றத்துக்கு அடித்தளம் போட்டுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இப்போதுதான் ‘டீசர்’… மெயின் பிக்சர் இனிமேல் வரப் போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
செங்கோட்டையன் அதிமுகவிலுள்ள 10 பெரிய தலைவர்களுடன் தீவிரமாக பேசி வருகிறார் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் —
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்
சென்னையைச் சேர்ந்த முக்கிய எம்எல்ஏ ஒருவர்
டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த 2 மூத்த தலைவர்கள்
எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் மேலும் பல மாஜி அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள்
இவர்கள் அனைவருடனும் செங்கோட்டையன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜன் போன்றவர்கள் தவெக நோக்கி நகர்கிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்திருந்தன. இப்போது செங்கோட்டையன் நடத்திய சந்திப்புகள், அதிமுகவில் பெரும் “டிஸ்மாண்டில் ஆபரேஷன்” நடைபெறுவதாக உறுதி அளிக்கும் வகையில் உள்ளன.
“Waaren… சிட்டி டிஸ்மாண்டில்!” என ரஜினி ‘எந்திரன்’ படத்தில் சொல்வதைப் போல,அதிமுகவின் முக்கிய ‘பாகங்களை’ ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து தவெகவுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறார் செங்கோட்டையன் என அரசியல் நகர்த்தல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிமுகவின் தற்கால நிலை —வெளியே மழைக்காலம்… அண்ணா அறிவாலயத்தில் மட்டும் இலையுதிர் காலம்!
இரட்டை இலையிலிருந்து இலைகள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்து, தவெகவிற்கு பறந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இதை தடுக்க முடியும் நிலையிலா, அல்லது அடுத்த சில நாட்களில் அதிமுக மேலும் பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியிருக்கும் நிலையா என்பது அரசியல் வட்டாரத்தின் முக்கிய கவலையாக உள்ளது.
அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய திருப்பங்கள் நடப்பது உறுதி என்கின்றனர் ரத்தம் கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
English Summary
Sengottaiyan is putting a wedge in the AIADMK Are 10 big leaders from AIADMK going to join the Tvk The jackpot has hit the Tvk