'எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் அடிமையாகிவிட்டார்; மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர்': பொன்முடி தாக்கு..! - Seithipunal
Seithipunal


திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். அப்போது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது 'தேர்தலையொட்டிதான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் கொடுக்க அரசு முன்வந்துள்ளது' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்து அவர் கூறியதாவது. 

அவருக்குதான் (இ.பி.எஸ்.) எப்போதுமே பயம். அவர் இனி வரவே முடியாது என்பதை அவரே முடிவு செய்துவிட்டார் என்றும், தற்போது பாஜகவின் அடிமையாகிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் எது வேண்டுமானாலும் கூறுவார். ஆனால், கல்வி வளர்ச்சிக்காக உண்மையில் உழைத்து கொண்டிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மடிக்கணினிகள் கொடுப்பது கல்வி வளர்ச்சிக்காக. படிக்கின்ற மாணவர்கள் இந்த காலக்கட்டத்திலேயே அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட திட்டங்கள் என்று கூறியுள்ளார். மேலும், அதை யார் வேண்டுமானாலும் குறை கூறட்டும். அதும் அவர் சொல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்கள் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் செய்துள்ள சாதனைகளை மக்கள் அறிவார்கள். அதனால் அவரது பேச்சு எப்போதும் எடுபடாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami has become a slave of the BJP says Ponmudi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->