கார்த்திக் உடல்நிலை வதந்திக்குப் முற்றுப்புள்ளி! — நவரச நாயகன் கார்த்திக் உடல்நலம் குறித்த சமீபத்திய தகவல்!
Karthik health rumours put to rest Latest information on Navarasa hero Karthik health
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தன. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்திருந்தனர். இந்த சூழ்நிலையில், எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கார்த்திக் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமாகி, அறிமுக படத்திலேயே மாநில விருது பெற்றவர். இளஞ்ஜோடிகள், நேரம் வந்தாச்சு, ராஜ மரியாதை, ஒரே ரத்தம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.
கடந்த ஆண்டுகளில் அவர் நுரையீரல் தொடர்பான சிறிய உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்றதாக தகவல்கள் இருந்தாலும், தற்போது அவர் நலமாக உள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் வதந்திகள் ரசிகர்களை பதட்டப்படுத்தின.
அத்தகைய வதந்திகளை முறியடிக்கும் வகையில், கார்த்திக் கோட்–சூட் அணிந்தபடி, இரவு நேரத்தில் சிலம்பம் சுற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டின் வெளிப்புறம் போல இருக்கும் அந்த இடத்தில் அவர் சுறுசுறுப்பாக சிலம்பம் அசைக்கும் இந்த காட்சி, அவர் நலமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த வீடியோவை நடிகர்–பத்திரிக்கையாளர் சித்ரா லக்ஷுமணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ரசிகர்கள்,“கார்த்திக் சார் இவ்வளவு ஃபிட்–ஆ இருக்கார் என்று நினைக்கவே இல்லை!”
என்று மகிழ்ச்சியும் நிம்மதியுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Karthik health rumours put to rest Latest information on Navarasa hero Karthik health