ஐடி ஊழிர்கள் அதிர்ச்சி: இந்தியாவில் அதிகரிக்கும் பணி நீக்க நடவடிக்கை: கடந்த 08 மாதங்களில் 1,33,070 அதிகமானோர் வேலை இழப்பு...! - Seithipunal
Seithipunal


பிரபல  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், மைக்ரோ சாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் தகவல் தொழில் நுட்ப துறையில் சுமார் 13 கோடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் பெங்களூர், சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் நேரடியாகவும், 02 கோடி பேர் மறைமுகமாகவும் இத்துறையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு உலக அளவில் சுமார் 1,115 நிறுவனங்களில் இருந்து 2,38,461 மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் 08 மாதங்களில் மட்டும் 1,33,070 அதிகமானோர் வேலையை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் 12,000 ஊழியர்களையும், ஆரக்கிள் நிறுவனம் 1,500 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளன. அடுத்ததாக, இன்போசிஸ், சிடிஎஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் குறிப்பிட்ட அளவில் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகி ஐ.டி ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஐடி துறையில் நிலவும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் காரணமாக ஊழியர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. அதிலும் தற்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மனித உழைப்பின் தேவையை குறைப்பதே இதற்கு முக்கிய கரணம் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, வெளிநாடுகளின் ஊழியர்களை எளிதில் பணிநீக்கம் செய்யமுடியாத நிலையில், இந்தியாவில் ஐடி ஊழியர்களின் வேலை பாதுகாப்புக்கு சட்டங்கள் இல்லாதது கவலை அளிப்பதாகவும்  ஐடி துறை ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increasing IT employee layoffs in India


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->