'இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகளின் கூட்டம் ரொம்ப நாள் நீடிக்காது': பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..! - Seithipunal
Seithipunal


குட்ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் வெறுப்புணர்வை ஒன்றிய பாஜக அரசு தூண்டுவதாக  விமர்சனம் செய்துள்ளார். அத்துடன், அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது: சென்னையின் அடையாளமாக குட்ஷெப்பர்ட் பள்ளி இயங்கி வருகிறது. இந்தியாவில் மத நல்லிணகத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், பள்ளி நிகழ்ச்சிகளில் அறிவுரையையும், அரசியலையும் பேச வேண்டியுள்ளது என்றும், தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ அரசின் திட்டங்கள்தான் காரணம் என்று பேசியுள்ளார்.  ''அத்துடன், 'உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம், '' என மாணவர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், ஒரு காலத்தில் நமக்கு மறுக்கப்பட்ட கல்வி, ஏராளமான போராட்டத்துக்கு பிறகு தான் கல்வி கதவு திறக்கப்பட்ட்டுள்ளது. இன்றும் கல்விக்காக போராடும் மக்கள் உள்ளனர். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் 'நான் முதல்வர்', 'புதுமைப்பெண்', 'காலை உணவுத்திட்டம்' என பல்வே றுதிட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

நாம் எல்லாருக்கும் எல்லாம் என செயல்படுகிறோம். ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது என்றும், அதற்கு அரசு துணைபோகிறது என்று விமர்சித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இது நிரந்தரம் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகளின் கூட்டம் ரொம்ப நாள் நீடிக்காது. சாதிமத பிரிவினை பார்க்காமல் எல்லாரையும் சமமாக மதிக்கும் பண்பை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் முன் முதல்வர் ஸ்டாலில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister MK Stalins speech that the group that wants to destroy religious harmony in India will not last long


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->