இபிஎஸ் பரப்புரையில் போது ஆம்புலன்ஸை ஓட்டுநரை தடுத்து நிறுத்தி, மிரட்டிய விவகாரம்: அடையாளம் தெரியாத 05 பேர் மீது, 05 பிரிவுகளில் வழக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


கடந்த 18-ஆம் தேதி வேலூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அப்போது அதிமுக கூட்டங்களில் நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆம்பூலன்ஸ் வருவதாக குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை  அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் 05 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்திரன் அளித்த புகாரின்படி அடையாளம் தெரியாத 05 பேர் மீது 05 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்னேற்ற சங்கம் அதன் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்று அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. முதலில் இபிஎஸ் பொதுக்கூட்டத்தில் மிரட்டும் வகையில் பேசிய பிறகு தான் அங்கிருந்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி இருக்கின்றனர் என்று புகார் மனுவில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆம்புலன்ஸ் ஒட்டுனரின் ஐ.டி கார்டு முதலியவற்றை பிடித்து இழுத்து, ஆம்புலன்ஸ் வண்டி அங்கிருந்து செல்லாத வகையிலும் செயல்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான உன்னதமான இரவு பகல் பாராமல் உதவி வரும் எங்களைப் போன்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு இதுபோன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறதாகவும், இதனால் தமிழ்நாடு மருத்துவத்துறை சார்ந்த நபர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

அத்துடன், எடப்பாடி பழனிசாமி நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வழியாக இயக்கினால் ஊழியர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைவுள்ளதால், தமிழக காவல்துறை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி இந்த செயலுக்கு பொதுமக்களிடையே பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case registered against 5 people for threatening and stopping an ambulance driver during an EPS campaign


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->