உக்ரைன் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - ஜெலன்ஸ்கி கண்டனம் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. தற்பொழுது ஓர் ஆண்டை கடந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் கட்டிடம் முழுவதும் உருக்குலைந்தது. இந்த தாக்குதலில் ஒரு பெண், ஒரு சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியுள்ளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மக்களின் ஒவ்வொரு நாளையும் பயங்கரவாத நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என்று ரஷ்யாவை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது என்றும், ஆக்கிரமிப்பாளர்களை நாங்கள் ஓட ஓட விரட்டுவோம் என்றும், உக்ரைனில் நடக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ரஷ்யாவே முழு பொறுப்பாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky condemns Russia missile attack in ukraine residential area


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->