400-க்கும் மேற்பட்ட போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள ரஷ்யா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.

இதனால் கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் வந்த உக்ரைன் ராணுவம் ரஷ்ய கொடிகளை கீழே இறக்கிவிட்டு, உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினர். மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர். 

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய கட்டுப்பாடில் உள்ள உக்ரைனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை மீட்பேன் என்றும், கெர்சன் நகரில் சட்ட திட்டங்களை அமல்படுத்துதல், நகர சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்ட கெர்சன் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சுமார் 400-க்கும் மேற்பட்ட போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் படை வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாகவும், போர்குற்றங்களில் ஈடுபடும் ரஷ்ய வீரர்களை கைது செய்யும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky accuses Russia of over 400 war crimes


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->