உலக ரேபிஸ் நோய் தினம்!.
ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக்கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது.
இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28 ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

புரட்சியாளர், மாவீரன் திரு.பகத் சிங் அவர்கள் பிறந்ததினம்!.
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.
கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.
சைமன் குழு 1928-ல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.
இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.
ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 24-வது வயதில் 1931, மார்ச் 23 ஆம் தேதி அன்று ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.