மக்களே அலர்ட்.. ஆயுத பூஜை பண்டிகை...வெளியூர்களுக்கு 3,225 சிறப்பு பஸ்கள்!
People be alert Weapons Festival 3 225 special buses for outsiders
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3,225 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்க பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி காலாண்டு விடுமுறை, சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.இந்தநிலையில் ஆயுத பூஜை பண்டிகை வருகிற 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து மறுநாள் விஜயதசமி என விடுமுறை நாட்கள் வருகின்றன. இதையடுத்து பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 3,225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல கடந்த 26-ந்தேதி வழக்கமான 2,092 பஸ்களுடன் 1,145 சிறப்பு பஸ்களும், 27-ந்தேதி 655 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுள்ளது . மேலும் நாளை 115 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 30-ந்தேதி பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், வழக்கமான 2,092 பஸ்களுடன் கூடுதலாக 1,310 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
People be alert Weapons Festival 3 225 special buses for outsiders