39 உயிரிழப்பால் தலைவணங்கிய சினிமா!- பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதி படக்குழுவின் அதிரடி முடிவு என்ன..? - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய் சேதுபதியை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு ஒரு பான்–இந்திய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னை நகரில் பிரம்மாண்டமாக நடைபெற இருந்தது.

ஆனால், கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை முன்னிட்டு, விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.இப்படத்தில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும், பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சார்மி கவுர், பூரி ஜெகன்நாத், ஜேபி நாராயண ராவ் கொண்ட்ரோலா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இசையமைப்பாளர் மஹதி ஸ்வரா சாகர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.பூரி – விஜய் சேதுபதி கூட்டணி திரைப்படம் என்றவுடன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema bowed down due loss 39 lives What dramatic decision Puri Jagannath and Vijay Sethupathi film crew


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->