212 சதவீதம் வளர்ச்சி..சாதனை படைத்த துறைமுகம்..எங்கு இருக்கிறது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கட்டுமான பொருட்களை கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 212 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:"இந்தியாவின் மொத்த சரக்குகள் கையாளும் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கட்டுமானப் பொருட்களைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை துறைமுகம் 5 லட்சத்து 48 ஆயிரத்து 994 டன் கட்டுமானப் பொருட்களைக் கையாண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டான 2024-25 நிதியாண்டின் ஆகஸ்ட் மாதம் வரைக் கையாண்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 468 டன்களை விட 212.87 சதவீதம் அதிகமாகும். கட்டுமானப் பொருட்கள் கையாள்வதில் 2023-24-ம் ஆண்டில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 113 டன்னிலிருந்து, 2024-25-ம் ஆண்டில் 11 லட்சத்து 1 ஆயிரத்து 41 டன்னாக அதிகரித்துள்ளது. 

துறைமுகம் கையாளும் கட்டுமானப் பொருட்களில், பெரிய கற்கள் , நொறுக்கிய கல்துண்டுகள் மற்றும் தரைத்தளம் அமைக்க பயன்படும் கான்கிரீட் கற்கள்  ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் வ.உ.சி. துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு, மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்த வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடி 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ், இந்தியாவின் அண்டை நாடுகளுடன் பொருளாதார மற்றும் கட்டுமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு மூலாதாரமாக திகழ்கிறது" என  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

212 percent growth a port that has achieved a record ndo you know where it is?


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->