'எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை' விஜய் குறித்த பதிவு: நடிகை கயாடு லோஹர் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


நடிகை கயாடு லோஹர் ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தற்போது ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  கரூரில் நடந்த துறை சம்பவம் குறித்து அவருடைய பெயரில் டுவிட்டர் பதிவு ஒன்று வைரல் ஆனது.

அதாவது, 'கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்தேன். இவை எல்லாம் தவெகவின் சுயநல அரசியலுக்காக. விஜய், உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?' என்று பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் தவறாகப் செய்தி பகிரப்பட்டது.

இந்நிலையில் நடிகை கயாடு லோஹர் இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அதன் போஸ்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

அந்த பதிவில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் டுவிட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் பதிவுகள் என்னுடையது அல்ல. எனக்கு கரூரில் நண்பர்கள் யாரும் இல்லை. என் நண்பர் இறந்துவிட்டதாக பரவும் செய்தி பொய்யானது. யாரும் நம்ப வேண்டாம். கரூரில் நடந்த சம்பவத்தால் நான் அதிகம் சோகமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்' என நடிகை கயாடு லோஹர் பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Kayadu Lohar explains that the post about Vijay is fake


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->