இலங்கை கடற்படை அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது..!
Sri Lankan Navy arrests 12 Karaikal fishermen at gunpoint
தமிழக மீனவர்களை கடலில் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாக உள்ளது. இதில் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு இலங்கை கடற்படையின் மேற்கொள்ளும் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. இந்நிலையில், இன்று காரைக்கால் மீனவர்கள், 12 பேர், கோடியகரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sri Lankan Navy arrests 12 Karaikal fishermen at gunpoint