நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்த அமித்ஷா..!
Amit Shah rejects Naxals ceasefire announcement
நாட்டில் நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் அனைத்து நக்சல்களும் வேரோடு அளிக்கப்படும் என்று மத்திய உல் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். அத்துடன், அவர்கள் அனைவரும் சரண் அடையும் வரையோ, பிடிபடும் வரையோ அல்லது கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில், நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை கடிதம் மூலம் அனுப்பியிருந்தது. அதனை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் உடனடியாக ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், இதுவரை நடந்தது தவறு, நாங்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கிறோம், சரண் அடைய விரும்புகிறோம் என்ற குழப்பத்தை பரப்பும் வகையில் நக்சல்கள் தரப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டதாகவும், அவர்களுக்கு சண்டை நிறுத்தம் இருக்காது என்று தான் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீங்கள் (நக்சல்கள்) சரண் அடைய விரும்பினால், சண்டை நிறுத்தம் தேவையில்லை. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்றும், ஒரு தோட்டா கூட உங்களை நோக்கி பாயாது. சரண் அடைய விரும்பினால் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
English Summary
Amit Shah rejects Naxals ceasefire announcement