அசாமில் இன்றிரவு 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்..!
Earthquake in Assam tonight
அசாமின் உடல்குரி பகுதியில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றிரவு 10.37 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக குறித்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. தேசிய நில அதிர்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலா அதிர்வானது, 10 கி.மீ. ஆழத்திலும், 26.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்ட்டுள்ளது. இந்த நிலா அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் கடந்த 14-ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. அத்துடன், கடந்த 02-ஆம் தேதி அசாமின் சோனித் பூரில் 3.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவினை குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Assam tonight