2025 ஆண்டில் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்ட இடங்கள் பட்டியல்: முதலிடத்தில் எது..?
List of most visited places in India by tourists in 2025
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக, 35 முதல் 44 வயது பிரிவினர் 20.67 சதவீதமாகவும், 45 வயது முதல் 54 வயது பிரிவினர் 20.24 சதவீதமாகவும் பயணம் செய்துள்ளனர். பாலினத்தின் அடிப்படையில் ஆண்கள் 57.7 சதவீதமாகவும், பெண்கள் 42.3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன.
அதன்படி, மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பார்வையிட்ட தலமாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் முதலிடத்தில் உள்ளது. இதற்கு உள்நாட்டு பயணிகள் 62.60 லட்சம், வெளிநாட்டு பயணிகள் 6.40 லட்சம் பேர் என மொத்தம் 69 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அடுத்தபடியாக ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரிய கோவிலை 35.70 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மூன்றாவதாக டெல்லியில் மெக்ராலி பகுதியில் அமைந்துள்ள குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 2.20 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 1.62 கோடியாகும். இவை கடந்த 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.22 சதவீதம் அதிகமாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 52.19 சதவீதம் அதிகம்.

மேலும், கடந்த 2025 -ஆம் ஆண்டு அமீரகத்துக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து, கத்தார், கனடா, குவைத், ஓமன் ஆகிய நாடுகளுக்கு அதிக இந்தியர்கள் அதிகம் பயணித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 98.4 சதவீத இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மூலமாகவே சென்றுள்ளனர். 1.54 சதவீதம் சாலை மார்க்கமாகவும், 0.54 பேர் கடல்வழி மார்க்கமாகவும் சென்றுள்ளனர்.
English Summary
List of most visited places in India by tourists in 2025