'நிலவுக்கு கெட்டநேரம் : எல்லாவற்றிற்கும் காரணம் பூமி': விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


நிலவின் மேற்பரப்பை பற்றி, சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குறித்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியுள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதாவது, நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறதாகவும்,  நிலவின் மேற்பரப்பில் அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஹெமடைட் ஒரு வகையான இரும்பு ஆக்சைடு. இதனால் தற்போது நிலவு துருப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வ்வாறு நடைபெறாமல் இருக்க ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது. அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும் என்று அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இவ்வாறு நிலவு துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம் என்று கூறியுள்ளனர். பூமியின் வளி மண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இதனை அவர்கள் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்துள்ளனர். அத்தோடு, இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த துருப்பிடித்தலை புரிந்து கொள்வதன் வழியே வருங்கால நிலவு தொடர்பான திட்டங்களில் அது தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Scientists have shocking news that the moon is rusting


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->